பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய, ஜெயா டி.வி யின் 'என்றென்றும் ராஜா' லைவ் தாமதமாக ஆறு பதினைந்து மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி முடிவதற்கு கிட்டத்தட்ட பனிரெண்டு மணி ஆகிவிட்டாலும் இந்த பாட்டு இல்லையே, அந்த பாட்டு இல்லையே என்ற ஏக்கத்துடனேயே ரசிகர்களை கலைய வைத்தது இசைஞானியின் இசை. குரு வணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சி இசைஞானியின் குரலில் 'ஜனனி ஜனனி' யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் ' இளமை இதோ இதோ ' வில் முடிவடைந்தது. கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி, பால முரளி கிருஷ்ணா, சின்ன குயில் சித்ரா, ஹரிஹரன், தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன், ஹரிச்சரனும் பாடினார்கள்.
பாடல்கள் பாடியதோடல்லாமல் நடு நடுவே சிம்பொனி, பாடல் Kம்போசிங்கில் பாரதிராஜா எப்படி பேசுவார் என்றெல்லாம் சுவைபட விசயங்களை சொல்லி ரசிக்க வைத்தார். Gamehouse Gratis Untuk Laptop Reviews. யுவன் கமலை போல மிமிக்ரி செய்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்.' பா ', ' அழகர் சாமியின் குதிரை ' போன்ற படங்களின் பின்னணி இசையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றன பிரகாஸ்ராஜ் தொகுத்து வழங்கிய ஜெயா டி.வி யின் 'என்றென்றும் ராஜா' லைவ் இன் கான்சர்ட்டின் சில முக்கிய அம்சங்கள் இதோ: குரு வணக்கத்துடன் துவங்கிய கான்சர்ட் இசைஞானியின் குரலில் 'ஜனனி ஜனனி' யில் ஆரம்பித்து எஸ்.பி.பி. யின் குரலில் ' இளமை இதோ இதோ ' வில் முடிவடைந்தது 'அம்மா என்றழைக்காத' பாடலை பாட கே.ஜே.யேசுதாசை இசைஞானி அழைத்தவுடன் கூட்டத்தில் ஒரே கரகோஷம். ' என் இனிய', 'பூவே செம்பூவே' போன்ற மெலடி பாடல்களை பாடிய கே.ஜே முடிவில் 'வச்ச பார்வை' என்ற குத்து பாடலையும் பாடி ரசிகர்களை அசர வைத்தார். ' பூவே ' பாடலில் இசை முடிவதற்கு முன்னரே இவர் பாட ஆரம்பித்து விட்டதால் அரங்கத்தில் பெரிய சலசலப்பு, பின் இருமுறை அவர் பாடிய பிறகே சலசலப்பு அடங்கியது. பாடகரையும், பாடல் வரிகளையும் தாண்டி இசைஞானியின் பின்னணி இசையின் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான பக்திக்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம் இவரை நேரே பார்க்காதவர்கள் குரலை மட்டும் கேட்டால் நிச்சயம் இருபத்தைந்து வயதிற்கு மேல் சொல்ல மாட்டார்கள். அறுபத்தைந்தை தாண்டியும் குரலை அதே இனிமையில் வைத்திருக்கும் எஸ்.பி.பி யே ஷோவின் ஹைலைட்.